Holy Cross Shrine Manapad's Official Website

Post Top Ad

Wednesday, 13 March 2019

அன்பின் தேவ நற்கருணையிலே - Anbin Deva Narkarunaiyile


அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப இரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்

கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயைபுரிவீர்.


Image version:

Post Top Ad